நன்றி பலி பீடம் கட்டுவோம்
Nandri Pali Peedam Kattuvoam
நன்றி பலி பீடம் கட்டுவோம்
Nandri bali peedam kattuvoam
நல்ல தெய்வம் நன்மை செய்தார்
Nalla dheivam nanmai seithaar
செய்த நன்மை ஆயிரங்கள்
Seitha nanmai aayirangal
சொல்லிச் சொல்லி பாடுவேன்
Solli solli paaduvaen
நன்றி தகப்பனே
Nandri thagappanae
நன்மை செய்தீரே
Nanmai seitheerae
ஜீவன் தந்து நீர் அன்பு கூர்ந்தீர்
Jeevan thanthu neer anbu koorntheer
பாவம் நீங்கிட கழுவிவிட்டீர்
Paavam neengida kazhuviviteer
உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
Umakkendru vaazha piritheduthu
உமது ஊழியம் செய்ய வைத்தீர்
Umathu oozhiyam seiya vaittheer
சிறந்த முறையிலே குரல் எழுப்பும்
Sirantha muraiyilae kural ezhuppum
சிலுவை இரத்தம் நீர் சிந்தினீரே
Siluvai iratham neer sintheeneerae
இரத்தக்கோட்டைக்குள் வைத்துக்கொண்டு
Irathakkottaikkul vaithukkondu
எதிரி நுழையாமல் காத்துக்கொண்டீர்
Ethiri nuzhaiyamal kathukkondeer
இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
Irulin athigaaram agatrivitteer
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்
Yesu arasukkul serthuvitteer
உமக்கு சொந்தமாய் வாங்கிக்கொண்டு
Umakku sonthamaai vaangikkondu
உரிமை சொத்தாக வைத்துக்கொண்டீர்
Urimai sothaaga vaithukkondeer
பார்க்கும் கண்களை தந்தீர் ஐயா
Parkkum kangalai thantheer aiyaa
பாடும் உதடுகள் தந்தீர் ஐயா
Paadum uthadugal thantheer aiyaa
உழைக்கும் கரங்களை தந்தீர் ஐயா
Uzhaikkum karangalai Thantheer aiyaa
ஓடும் கால்களை தந்தீர் ஐயா
Odum kaalgalai thantheer aiyaa
நல்ல குடும்பம் தந்தீரையா
Nalla kudumbam thantheeraiyaa
செல்ல பிள்ளைகள் தந்தீரையா
Chella pillaigal thantheeraiyaa
அணைக்கும் கணவனை தந்தீரையா
Anaikkum kanavanai thantheeraiyaa
அன்பு மனைவியை தந்தீரையா
Anbu manaiviyai thantheeraiyaa