← Jebathota Jeyageethangal (Vol 2) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 2 • பாகம் 2 பாடல் #17 📜 10 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

மரித்த இயேசு உயிர்த்தெழுந்தார்

Maritha Yaesu Uyirthu Vittaar

✍️ Composed & Sung by Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} (Maritha Yesu Uyirthu Vittar Maritha Yesu Uyirthelunthar)
17
✨ பல்லவி / Chorus

மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா

Maritha yesu uyirthu vittaar alleluiah

மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா

Mannan yesu jeevikkiraar alleluiah

✨ பல்லவி / Chorus

அல்லேலூயா ஜீவிக்கிறார்

Alleluiah jeevikkiraar

அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார்

Alleluiha alleluiah jeevikkiraar

சரணம் 1 / Verse 1

மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே

Maranam avarai thaduthu nirutha mudiyavillaiyae

கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே

Kallaraiyoa kattikaakka mudiyavillaiyae

பகுதி / Other

யூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரே

Yoothasinggam kristhuraaja vettri pettraarae

சோர்ந்துபோன மகனே நீ துள்ளிப்பாடு

Soarnthupoana maganae nee thullippaadu

சரணம் 2 / Verse 2

கண்ணீரோடு மரியாள்போல அவரைத் தேடிடுவோம்

Kanneeroadu mariyaalpoala avarai thaeduvoam

கர்த்தர் இயேசு நமக்கு இன்று காட்சி தருவார்

Karthar yesu namakku indru kaatchi tharuvaar

பகுதி / Other

கனிவோடு பெயர் சொல்லி அழைத்திடுவார்

Kanivoadu peyar solli azhaithiduvaar

கலக்கமின்றிக் காலமெல்லாம் சாட்சி பகர்வோம்

Kalakkamindri kaalamellaam saatchi pagarvoam

சரணம் 3 / Verse 3

எம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார்

Emmaavoor seedaroadu nadanthu sendraar

இறைவார்த்தை போதித்து ஆறுதல்தந்தார்

Iraivaarthai poathithu aaruthal thanthaar

பகுதி / Other

அப்பம்பிட்டு கண்களையே திறந்து வைத்தார்

Appampittu kangalaiyae thiranthu vaithaar

அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார்

Antha yesu nammoadu nadakkindraar

சரணம் 4 / Verse 4

அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே

Anjaathae muthalum mudivum yesuthaanae

இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர்

Iranthaalum ennaalum vaazhkindravar

பகுதி / Other

நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவோம்

Naavinaalae arikkai seithu meetpadaivoam

நாள்தோறும் புதுபெலனால் நிரம்பிடுவோம்

Naalthoarum puthubelanaal nirambiduvoam