← Jebathota Jeyageethangal (Vol 1) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 1 • பாகம் 1 பாடல் #46 📜 4 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

என் பாவங்கள் என் இயேசு

En Paavanggal En Yaesu

✍️ Composed & Sung by Fr. S. J. Berchmans {பெர்க்மான்ஸ்} (En Paavangkal En Yesu Paavangal Yen Pavangal Yen Yesu)
17
✨ பல்லவி / Chorus

என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்

En paavangkal en iyaesu manniththu vittaar

தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்

Than makanaay en iyaesu aetrruk kontaar

சரணம் 1 / Verse 1

இனி நான் பாவியல்ல

Ini naan paaviyalla

பரிசுத்தமாகிவிட்டேன்

Parisuththamaagivittaen

நேசரின் பின் செல்வேன் – நான்

Naesarin pin chelvaen – naan

திரும்பி பார்க்க மாட்டேன்

Thirumbi paarkka maattaen

சரணம் 2 / Verse 2

ஆழ்கடலில் எறிந்துவிட்டார்

Aazhkadalil erinthuvittaar

காலாலே மிதித்து விட்டார்

Kaalaalae mithiththu vittaar

நினைவுகூர மாட்டார் – என்

Ninaivukoora maattaar – en

நேசரைத் துதிக்கின்றேன் – இனி

Naesaraith thuthikkindraen – ini

சரணம் 3 / Verse 3

கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்

Kiristhuvukkul vaazhkindraen

மறுபடி பிறந்துவிட்டேன்

Marupadi piranthuvittaen

பழையன கழிந்தனவே – நான்

Pazhaiyana kazhinthanavae – naan

புதிய படைப்பானேன்

Puthiya padaippaanaen