ஸ்தோத்திரம் துதி பாத்திரா
Sthoathiram Thuthi Paathiraa
ஸ்தோத்திரம் துதி பாத்திரா - உம்மை
Sthoathiram thuthi paathira - ummai
இன்றும் என்றும் துதித்திடுவேன்!
Indrum endrum thuthithiduvaen
காத்தீரே என்னைக் கருத்தாக
Kaatheerae ennai karuththaaga
வழுவாமல் என்னை உமக்காக
Vazhuvaamal ennai umakkaaga
எடுத்தீர் என்னையும் உமக்காக
Edutheer ennaiyum umakkaaga
கொடுத்தீர் உமையும் எனக்காக!
Kodutheer umaiyum enakkaaga
வல்ல வான ஞான வினோதா
Valla vaana gnaana vinoatha
துதியே துதியே துதித்திடுவேன்!
Thuthiyae thuthiyae thuthithiduvaen
எல்லாக் குறையும் தீர்த்தீரே
Ellaa kuraiyum theertheerae
தொல்லை யாவும் தொலைத்தீரே!
Thollai yaavum tholaitheerae
அல்லல் யாவும் அறுத்தீரே
Allal yaavum arutheerae
அலைந்த எனையும் மீட்டீரே!
Alaintha enaiyum meetteerae
நம்பினோரைக் காக்கும் தேவா
Nambinoarai kaakkum thaevaa
துதியே துதியே துதித்திடுவேன்!
Thuthiyae thuthiyae thuthithiduvaen
அம்புவி யாவும் படைத்தீரே
Ampuvi yaavum padaitheerae
அம்பரா உந்தன் வாக்காலே!
Ambaraa unthan vaakkaalae
எம்பரா எல்லாம் ஈந்தீரே
Embaraa ellaam eentheerae
நம்பினோர்க் குந்தன் தயவாலே!
Nambinoark kunthan thayavaalae
கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்
Kannin manipoal kaatheerae emmai
துதியே துதியே துதித்திடுவேன்!
Thuthiyae thuthiyae thuthithiduvaen
அண்ணலே உந்தன் அருளாலே
Annalae unthan arulaalae
அடியாரைக் கண் பார்த்தீரே!
Adiyaarai kann paartheerae
மன்னா எமக்கும் நீர் தானே
Manna emakkum neer thaanae
எந்நாளும் எந்தன் துணை நீரே!
Ennaalum enthan thunai neerae
தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
Theeyoan ambugal thaakkaathae emmai
துதியே துதியே துதித்திடுவேன்
Thuthiyae thuthiyae thuthithiduvaen
தேவே நீர் உந்தன் சிறகாலே
Thaevae neer unthan siragaalae
தினமும் மூடிக்காத்தீரே!
Thinamum moodi kaatheerae
தீதணுகாதும் மறைவினிலே
Theethanugaathum maraivinilae
தேடியுமதடி தங்கிடுவேன்!
Thaedi umathadi thanggiduvaen
அல்லேலூயா ஸ்தோத்திரமே
Allelooyaa sthoathiramae
துதியே துதியே துதித்திடுவேன்!
Thuthiyae thuthiyae thuthithiduvaen
அகில சிருஷ்டிகளும் துதிக்க
Agila sirushtigalum thuthikka
அடிமை துதியாதிருப்பேனோ?
Adimai thuthiyaathiruppaenoa
அல்லும் பகலும் நித்தியமாய்
Allum pagalum niththiyamaai
அன்பே உமையே துதித்திடுவேன்!
Anbae umaiyae thuthithiduvaen