போற்றிப் பாடி துதிப்போம்
Poattri Paadi Thuthippoam
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of போற்றிப் பாடி துதிப்போம் (Poattri Paadi Thuthippoam)
போற்றிப் பாடி துதிப்போம்
Poattri paadi thuthippoam
இயேசு நாமம் துதிப்போம்
Yaesu naamam thuthippoam
சர்வலோக நாதா உமக்கு
Sarvaloaga naathaa umakku
கோடி கோடி ஸ்தோத்திரம்
Koadi koadi sthoathiram
தேவனே வாரும் ஆவியே வாரும்
Thaevanae vaarum aaviyae vaarum
ஆர்ப்பரிக்கின்றோம்
Aarpparikkindroam
அல்லேலூயா - 2
Allaelooyaa - 2
இயேசு நமது கர்த்தரென்று எண்ணும் வேளையில்
Yaesu namathu kartharendru ennum vaelaiyil
உள்ளமே பொங்குதே பொங்கிப் பாடுதே
Ullamae pongguthae ponggi paaduthae
ஆராதிக்கும் வேளை ஆர்ப்பரிக்கும் வேளை
Aaraathikkum vaelai aarpparikkum vaelai
வானமே பூமியே
Vaanamae poomiyae
கர்த்தரைக் கொண்டாடிடு
Kartharai kondaadidu
கர்த்தர் செய்த நன்மைகளை எண்ணிப் பாடுவோம்
Karthar seitha nanmaigalai enni paaduvoam
மகிமையின் தேவனை போற்றிப் பாடுவோம்
Mahimaiyin Thaevanai poattri paaduvoam
தூதர் வாழ்த்தும் தேவன் தூயர் போற்றும் தேவன்
Thoothar vaazhthum Thaevan thooyar poattrum Thaevan
மாசில்லா இயேசுவை வாழ்த்தி
Maasillaa Yaesuvai vaazhthi
என்றும் வணங்குவோம்
Endrum vanangguvoam
நீதி தேவன் இயேசுவை புகழ்ந்து பாடுவோம்
Neethi Thaevan Yaesuvai pugazhnthu paaduvoam
நியாயமே செய்வோரை கீர்த்தனம் செய்வோம்
Niyaayamae seivoarai keerthanam seivoam
ஆனந்தமாய் பாடி தோத்திரங்கள் கூறி
Aananthamaai paadi thoathiranggal koori
இயேசுவே தேவனென்று
Yaesuvae Thaevanendru
அகிமெல்லாம் கூறுவோம்
Ahilamellaam kooruvoam