மனமிரங்கும் தெய்வம் இயேசு
Manamiranggum Theivam Yaesu
மனமிரங்கும் தெய்வம் இயேசு
Manamirangum theivam yesu
சுகம் தந்து நடத்திச் செல்வார்
Sugam thanthu nadatthi selvaar
யேகோவா ரஃப்பா.... இன்றும் வாழ்கிறார்
Yegova raafa... Indrum vaazhgiraar
சுகம் தரும் தெய்வம் இயேசு
Sugam tharum theivam yesu
சுகம் இன்று தருகிறார்
Sugam into tharugiraar
பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் - மாமி
Pethuru veettukkul nuzhainthaar – maami
கரத்தை பிடித்து தூக்கினார் -2
Karatthai piditthu thookkinaar
காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று - அவள்
Kaaichal udanae andru neengitru – aval
கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள் - 2
Karthar thondu seithu magizhnthal -2
குஷ்டரோகியை கண்டார் - இயேசு
Kushtarogiai kandaar – yesu
கரங்கள் நீட்டித் தொட்டார் -2
Karangal neettith thottaar
சித்தமுண்டு சுத்தமாகு - என்று
Sitthamundu sutthamaagu – yendru
சொல்லி சுகத்தைத் தந்தார் -2
Solli sugatthai thanthaar
நிமிர முடியாத கூனி - அன்று
Nimira mudiyaatha kooni – andru
இயேசு அவளைக் கண்டார்-2
Yesu avalai kandaar
கைகள் அவள் மேலே வைத்தார் - உடன்
Kaigal aval mael vaitthaar – udan
நிமிர்ந்து துதிக்கச் செய்தார் -2
Nimirnthu thuthikka seithaar
பிறவிக் குருடன் பர்த்திமேயு அன்று
Piravi kurudan parthimeyu andru
இயேசுவே இரங்கும் என்றான்-2
Yesuvae irangum yentraan
பார்வையடைந்து மகிழ்ந்தான் உடன்
Paarvai yadainthu magilnthaan udan
இயேசு பின்னே நடந்தான் -2
Yesu pinnae nadanthaan
கதறும் பேதுருவைக் கண்டு - இயேசு
Katharum peathuruvaik kandu – yesu
கரங்கள் நீட்டிப் பிடித்தார்-2
Karangal neettip piditthaar
படகில் ஏறச் செய்து - அவர்
Padagil yerach seithu – avar
கரையில் கொண்டு போய்ச் சேர்த்தார் -2
Karaiyil kondu pooi seartthaar