திறப்பில் உம்முகம் நிற்கவும்
Thirappil Ummugam Nirkavum
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of திறப்பில் உம்முகம் நிற்கவும் (Thirappil Ummugam Nirkavum)
திறப்பில் உம்முகம் நிற்கவும்
Thirappil ummugam nirkavum
சுவரை அடைக்கவும் சம்மதம்
Suvarai adaikkavum sammatham
அழைக்கும் எஜமானர் சந்நிதி
Azhaikkum ejamaanar sannithi
அடிபணிந்தேன் நான் அர்ப்பணம்!
Adipanithaen naan arppanam!
ஜெபமே ஜெயம்!
Jebamae jeyam!
ஜெபமே ஜெயம்! அல்லேலூயா!
Jebamae jeyam! Allaelooyaa!
ஒலிவமலையில் கேட்ட ஓலம்
Olivamalaiyil kaetta oalam
இதயம் நொறுங்கும் ஆத்மதாகம்
Ithayam norunggum aathmathaagam
இயேசுவை மாதிரியாக்கிடும்
Yaesuvai maathiriyaakkidum
ஜெபத்தை அனுபவமாக்கிடும்
Jebathai anubavamaakkidum
ஜெபவரம் நீர் தந்திடும்
Jebavaram neer thanthidum
என் சொந்த ஜனத்தின் பாவத்தை
En sontha janathin paavathai
நெஞ்சில் ஏற்று நான் கெஞ்சவும்!
Nenjil aettru naan kenjavum!
தலைவன் மோசே நெகேமியா
Thalaivan moasae nehaemiyaa
தானியேல் போல் பரிந்துரைக்கும்
Thaaniyael poal parinthuraikkum
விசால உள்ளம் தந்திடும்!
Visaala ullam thanthidum!
எப்போதும் கேட்கும் அப்பா பிதாவே
Eppoathum kaetkum appaa pithaavae
இப்போதென் வேண்டுதல் கேட்டருளும்!
Ippoathen vaenduthal kaettarulum!
சுயலாப விண்ணப்பம் மறையவும்
Suyalaaba vinnappam marayavum
பொதுநல மன்றாட்டில் வேர் ஊன்றவும்
Pothunala mandraattil vaer oondravum
உயர்ந்த மனதைத் தந்திடும்!
Uyarntha manathai thanthidum!