இயேசுவே உம் வரவை நித்தம்
Yaesuvae Um Varavai Niththam
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of இயேசுவே உம் வரவை நித்தம் (Yaesuvae Um Varavai Niththam)
இயேசுவே உம் வரவை நித்தம் எண்ணி வாழ்கிறேன்
Yaesuvae um varavai nitham enni vaazhgiraen
உமது அழகு வதனம் காண துடிதுடிக்கிறேன்
Umathu azhagu vathanam kaana thudithudikkiraen
மகிமையான உந்தன் வீட்டை வாஞ்சித்திருக்கிறேன்
Mahimaiyaana unthan veettai vaanjithirukkiraen
தங்க பூமீ அதில் நடக்க ஆசைப்படுகிறேன்
Thanga poomi athil nadakka aasaippadugiraen
இயேசையா நீர் எந்தன் ஏக்கமையா
Yaesaiyaa neer enthan aekkamaiyaa
இயேசையா எனக்கு எல்லாமே நீர் தானையா
Yaesaiyaa enakku ellaamae neer thaanaiyaa
எனது பாவ சுமைகள் நீங்கி விடுதலை பெற்றேன்
Enathu paava sumaigal neenggi viduthalai pettraen
மரித்துயிர்த்த தேவனுக்காய் பிழைத்திருக்கிறேன்
Marithuyirtha Thaevanukkaai pizhaithirukkiraen
சகலமானவர்க்கும் தேவ தூது சொல்கிறேன்
Sahalamaanavarkkum Thaeva thoothu solgiraen
மரணம் வரை கீழ்படிந்து வாழவிருக்கிறேன் - நான்
Maranam varai keezhpadinthu vaazhavirukkiraen - Naan
தேக பலன் ஒடுங்கினாலும் சோர்வு நீங்கினேன்
Thaega palan odungginaalum soarvu neengginaen
ஆவி மனிதன் பெலன் பெறவே மகிழ்ந்திருக்கிறேன்
Aavi manithan pelan peravae mahizhnthirukkiraen
பரம வாசல் ஸ்தலத்தை நாளும் ஏங்கித் தவிக்கிறேன்
Parama vaasal sthalathai naalum aenggi thavikkiraen
மரண அச்சமின்றி நித்திய வாழ்வை தொடர்கிறேன் - நான்
Marana achamindri nithiya vaazhvai thodargiraen - Naan
உலகின் வாசம் கொஞ்சம் காலம் அறிந்திருக்கிறேன்
Ulagin vaasam konjam kaalam arinthirukkiraen
தேவ பிரியம் செய்வதே என் ஆவலாக்கினேன்
Thaeva piriyam seivathae en aavalaakkinaen
கணக்கு கேட்கும் கர்த்தர் முன்பு நிற்கும் நாளிலே
Kanakku kaetkum Karthar munbu nirkkum naalilae
மகிழ்ச்சி பொங்க பரிசளிப்பார் மகிமைப்படுத்துவார் - என்
Magizhchi pongga parisalippaar mahimaippaduthuvaar - En