திறப்பின் வாசலில் நிற்கும் மனிதனை
Thirappin Vaasalil Nirkkum Manithanai
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of திறப்பின் வாசலில் நிற்கும் மனிதனை (Thirappin Vaasalil Nirkkum Manithanai)
திறப்பின் வாசலில் நிற்கும் மனிதனை
Thirappin vaasalil nirkkum manithanai
தேடினேன் எங்கும் காணவில்லை
Thaedinaen enggum kaanavillai
தனக்காய் வாழ துடிக்கும் மனிதர்கள்
Thanakkaai vaazha thudikkum manithargal
தரணியில் எங்கும் குறைய வில்லை
Tharaniyil enggum kuraiya villai
தாழ்மை தேவனின் தாகமறிய
Thaazhmai Thaevanin thaagamariya
முனையும் தேவ மனிதர் எங்கே
Munaiyum Thaeva manithar enggae
இருளில் வாழும் இந்திய மனிதரை
Irulil vaazhum inthiya manitharai
விரைந்து மீட்கும் இளைஞர் எங்கே
Virainthu meetkum ilaingar enggae
மண்ணில் வாழும் கொஞ்ச நாட்களை
Mannil vaazhum konja naatkalai
மதித்து வாழ முனைபவர் யார்
Mathithu vaazha munaibavar yaar
மகிமை இழந்து மாளும் மனிதரை
Mahimai izhanthu maalum manitharai
கிறிஸ்து சமூகம் இணைப்பவர் யார்
Kiristhu samoogam inaippavar yaar
குற்ற உணர்வு முற்றும் நீங்கிய
Kuttra unarvu muttrum neengiya
குயவன் கரத்தின் களிமண் யார்
Kuyavan karathin kaliman yaaar
கனமாய் உழைக்கும் பாத்திரமாக
Kanamaai uzhaikkum paathiramaaga
வனைய கொடுப்பவர் நம்மிலே யார்
Vanaiya koduppavar nammilae yaar