மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே
Meettedukkappatta Koottamae
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே (Meettedukkappatta Koottamae)
மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே - விரைந்து செயல்படு
Meettedukkappatta koottamae - virainthu seyalpadu
மீட்பர் இயேசு வேலை செய்ய - விரைந்து புறப்படு
Meetpar Yaesu vaelai seiya - virainthu purppadu
நாட்கள் மிக விரையுதே நாற்று நன்றாய் வளருதே - 2
Naatkal miga viraiyuthae naatru nandraai valaruthae - 2
ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே - 2
Aatkal vaendum aruvadaikku aam athigam peruguthae - 2
தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் - உலகமெங்கிலும்
Therinthedukkappattavargal naam - ulagamenggilum
அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் - உலக முழுவதும்
Anuppivaikkappattavargal naam - ulaga muzhuvathum
தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் - 2
Thaesanggal nam sonthamaam jaathigal nam suthanthiram - 2
நேசர் இயேசு அரசாங்கம் அமைந்திடுமே சீக்கிரம் - 2
Naesar Yaesu arasaanggam amainthidumae seekiram - 2
காலங்களை உணர்ந்திடுவோம் - கர்த்தரின் பணியிலே
Kaalanggalai unarnthiduvoam - Kartharin paniyilae
கருத்துடனே செயல்புரிவோம் .. ஜனங்கள் மத்தியிலே
Karuthudanae seyalpurivoam - jananggal mathiyilae
ஞாலமெல்லாம் மீட்கவே இயேசு நாமம் கேட்கவே - 2
Gnaalamellaam meetkavae Yaesu naamam kaetkavae - 2
தீவிரமாய் செயல்படுவோம் தீங்குவோரை நேசிப்போம் - 2
Theeviramaai seyalpaduvoam theenguvoarai naesippoam - 2
பாரதத்தின் மாநிலம் எல்லாம் - பரமன் ஆட்சியாய்
Baarathathin maanilam ellaam - paraman aatchiyaai
பரவிடவே பாடுபடுவோம் .. இரத்த சாட்சியாய்
Paravidavae paadupaduvoam - iratha saatchiyaai
வாருங்கள் என்றழைக்கிறார் வாஞ்சையோடு சென்றிடுவோம்-2
Vaarunggal endrazhaikkiraar vaanjaiyoadu sendriduvoam - 2
வாழ்க்கைதனை அர்ப்பணிப்போம் அறுவடைக்கு சென்றிடுவோம்
Vaazhkkaithanai arppanippoam aruvadaikku sendriduvoam