🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #163 📜 9 Stanzas செயல்வீரர் கீதங்கள்

தூய்மையே வலிமை கேளீர்

Thooimaiyae Valimai Kaeleer

✍️ Composed & Sung by Emil Jebasingh {எமில் ஜெபசிங்} (Thooimaiye Valimai Keleer Thuimaiye Valimai Thoimaiye Valimai Thooimaye Thuimaye Thoimaye)
17
✨ பல்லவி / Chorus

தூய்மையே வலிமை கேளீர்!

Thooimaiyae valimai kaeleer!

வாய்மையே உயர்வு காணீர்!

Vaaimaiyae uyarvu kaaneer!

இயேசுவில் இரண்டும் பெறுவீர் (2)

Yaesuvil iranddum peruveer (2)

சரணம் 1 / Verse 1

சந்திரன் பாதையைக் கண்டாய்!

Santhiran paathaiyai kandaai!

சமுத்திர ஆழத்தை வென்றாய்!

Samuthira aazhathai vendraai!

பகுதி / Other

தூய்மையின் பாதைதான் எங்கே?

Thooimaiyin paathaithaan enggae?

என பதில் ஏதும் உலகினில் இல்லை!

Ena pathil aethum ulaginil illai!

சரணம் 2 / Verse 2

அழிக்கவும் ஆக்கவும் அணுதான்

Azhikkavum aakkavum anu thaan

பலபல புதுமைகள் நலம்தான்

Pala pala puthumaigal nalamthaan

பகுதி / Other

யாவையும் கண்ட மனிதா

Yaavaiyum kanda manithaa

மனத்தூய்மைக்கு மார்க்கம் சொல் எனக்கு!

Manathooimaikku maarkkam sol enakku!

சரணம் 3 / Verse 3

தத்துவம் பேசுவார் உண்டு

Thathuvam paesuvaar undu

தர்க்க சாஸ்திரம் புரட்டுவார் உண்டு

Tharkka saasthiram purattuvaar undu

பகுதி / Other

கல்வி கொடுப்பது அறிவு

Kalvi koduppathu arivu

ஆனால் தேவன் அருளுவது ஞானம்!

Aanaal Thaevan aruluvathu gnaanam!

சரணம் 4 / Verse 4

பரிசுத்த ஆவியின் நிறைவு

Parisutha aaviyin niraivu

பரிசுத்தமானதோர் வாழ்வு

Parisuthamaanathoar vaazhvu

பகுதி / Other

வெற்றியின் ஜீவியம் கொள்ள

Vettriyin jeeviyam kolla

இயேசு அழைக்கிறார்இணங்கி நீ செல்ல!

Yaesu azhaikkiraar inanggi nee sella!