எப்போதும் உம்மோடுதான்
Eppoathum Ummoaduthaan
எப்போதும் உம்மோடுதான்
Eppoathum ummoaduthaan
உம் வலக்கரம் என்னோடுதான்
Um valakkaram ennoaduthaan
என் வாஞ்சையெல்லாம் நீர்தானே
En vaanjaiyellaam neerthaanae
என் வாழ்க்கையெல்லாம் உம் புகழ்தானே
En vaazhkaiyellaam um pugazhthaanae
ஆராதனை ஆராதனை (2)
Aarathanai aarathanai (2)
ஆயுள் இருக்கும்வரை (என்)
Aayul irukkumvarai (en)
பரலோகத்தில் உம்மையல்லாமல்
Paraloagathil ummaiyallaamal
எனக்கு யாருண்டு
Enakku yaarundu
பூலோகத்தில் உம்மைத்தவிர
Pooloagathil ummaithavira
வேறே விருப்பமில்லை - எனக்கு
Vaerae viruppamillai - enakku
என்றென்றைக்கும் என் உள்ளத்தின்
Endrendraikkum en ullathin
பெலனே நீர்தானையா
Pelanae neerthaanaiyaa
உம் சித்தம் போல நடத்துகிறீர்
Um siththam poala nadathugireer
மகிமையில் ஏற்றுக் கொள்வீர் - உம்
Mahimaiyil aettruk kolveer - um
காருண்யத்தின் கயிறுகளால்
Kaarunyathin kayirugalaal
கட்டி என்னை இழுத்துக் கொண்டீர்
Katti ennai izhuthuk kondeer
பேரன்பினால் அணைத்துக் கொண்டீர் - உம்
Paeranbinaal anaithuk kondeer - um
பெரியவனாக்கி விட்டீர் - என்னைப்
Periyavanaakki vitteer - ennaip
கழுத்தில் உள்ள நுகம் நீக்கி
Kazhuththil ulla nugam neekki
நிமிர்ந்து நடக்கச் செய்தீர் - என்
Nimirnthu nadakkach seitheer - en
கற்றுக் கொடுத்தீர் கரம் பிடித்து
Kattruk kodutheer karam pidithu
கைவிடாமல் காப்பாற்றினீர் - இதுவரை
Kaividaamal kaapattrineer - ithuvarai
உம்மைத்தானே அடைக்கலமாய்
Ummaithaanae adaikkalamaai
அண்டிக் கொண்டேன் அனுதினமும்
Andik kondaen anuthinamum
புகலிடமே என் மறைவிடமே
Pugalidamae en marividamae
உம் புகழ்தனை சொல்லி வருவேன்
Um pugazhthanai solli varuvaen