நற்கனி தேடிடும் நல்லாண்டவா
Narkani Thaedidum Nallaandavaa
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of நற்கனி தேடிடும் நல்லாண்டவா (Narkani Thaedidum Nallaandavaa)
நற்கனி தேடிடும் நல்லாண்டவா
Narkani thaedidum nallaandavaa
நானொரு பாழ்மரம் என்னைப் பாரும்
Naanoru paazh-maram ennai paarum
வாழ்நாளை வீணாளாய்க் கழித்திட்டேனே
Vazhnaalai veenaalaai kazhithittaenae
வருந்தும் இப்பாவியைக் கண்ணோக்கிடும்
Varunthum ippaaviyaik kannoakkidum
மெய்யான திராட்சைச் செடி இயேசுவே
Meiyaana thiraatchai sedi Yaesuvae
கொடியாக இணைந்திட்ட என்னைப் பாரும்
Kodiyaaga inaithita ennai paarum
எப்போதும் உம்மில் நான் நிலைத்திருக்க
Eppoathum ummil naan nilaithirukka
தப்பாது கனிதர அருள் தந்திடும்
Thappathu kani thara arul thanthidum
உம்பணி செய்திட கனி கொடுக்க
Umpani seithida kani kodukka
எம்மை நீர் அழைத்திட்டீர் தெரிந்து கொண்டீர்
Emmai neer azhaithitteer therinthu kondeer
உம் வாக்கை என்னில் நீர் நிறைவேற்றிடும்
Um vaakai ennil neer nirai-vaetridum
உம் சித்தம் நிறைவேற்றி உதவிசெய்யும்
Um sitham nirai-vaetri uthavi seiyum
தினந்தோறும் வேதத்தை விரும்பிடவே
Thinathoarum vaethathai virumbidavae
தியானித்து உம்மோடு உறவாடவே
Thiyaaniththu ummoadu uravaadavae
திரளாக உமக்கொன்று கனிகொடுக்க
Thiralaaga ummakkendru kanikodukka
தினந்தோறும் என்னை நீர் சுத்தம் செய்யும்
Thinanthoarum ennai neer suththam seiyum
என்னை நான் படைத்திட்டேன் பலிபீடத்தில்
Ennai naan padaithittaen palipeedaththil
ஏற்று நீர் எடுத்தாண்டு வழி நடத்தும்
Aetru neer eduthaandu vazhi nadathum
இறுதியில் உம்முகம் தரிசிக்கவே
Iruthiyil ummugam tharisikkavae
ஏழையாம் எனக்கு நீர் அருள் தந்திடும்
Aezhaiyaam enaku neer arul thanthidum