🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 11 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

சீக்கிரமாய் வந்திடுவேன்

Seekiramaai Vanthiduvaen Endru Sonneerae

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (Seekiramai Vanthiduven Sikiramai Vanthiduven)
17
✨ பல்லவி / Chorus

சீக்கிரமாய் வந்திடுவேன் என்று சொன்னீரே

Seekiramaai vanthiduvaen endru sonneerae

வருகையின் நேரமோ நெருங்கி விட்டதே

Varugaiyin naeramoa nerunggi vittathae

✨ பல்லவி / Chorus

காலம் செல்லாதே

Kaalam sellaathae

வருகை வந்ததே

Varugai vanthathae

இரண்டாம் வருகை வந்ததே

Irandaam varugai vanthathae

சரணம் 1 / Verse 1

பாவத்திலே அழிந்து போகும் ஜனங்களை எல்லாம்

Paavathilae azhinthu poagum janangalai ellaam

கடைசிக் காலம் வந்ததென்று உணரச் செய்யுமே

Kadaisi kaalam vanthathendru unarach seiyyumae

பகுதி / Other

எழுப்புதலின் தீயை பற்றி எரியச் செய்யுமே

Ezhupputhalin theeyai pattri eriyach seiyyumae

இராஜ்ஜியத்தின் ஜனங்களாக மாறச் செய்யுமே

Raajjiyathin janangalaaga maarach seiyyumae

சரணம் 2 / Verse 2

அந்திக்கிறிஸ்து நாட்கள் அது பயங்கரமே

Anthikiristhu naatkal athu payanggaramae

அதிலிருந்து எங்களையும் காத்துக் கொள்ளவே

Athilirunthu enggalaiyum kaathuk kollavae

பகுதி / Other

ஆயத்தமாக்கிடும் எந்தன் இயேசுவே

Aaayathamaakkidum enthan Yaesuvae

வருகையில் எங்களை சேர்த்துக் கொள்ளுமே

Varugaiyil enggalai saerthuk kollumae

சரணம் 3 / Verse 3

வருகைக்கான அடையாளங்கள் நிறைவேறுதே

Varugaikkaana adaiyaalanggal niraivaeruthae

கிருபையின் காலமும் முடிந்து விடுமே

Kirubaiyin kaalamum mudinthu vidumae

பகுதி / Other

மத்திய வானில் மகிமையாக மேகத்தில் வருவீர்

Mathiya vaanil magimaiyaaga maegathil varuveer

மணவாட்டியாய் சபையை சேர்த்துக் கொள்ளுவீர்

Manavaatiyaai sabaiyai saerthuk kolluveer

சரணம் 4 / Verse 4

எந்த நேரமும் இயேசுவின் வருகை இருக்குமே

Entha naeramum Yaesuvin varugai irukkumae

நிர்விசாரமாய் இராமல் தயாராகுவோம்

Nirvisaaramaai iraamal thayaaraaguvoam

பகுதி / Other

இயேசுவை வரவேற்க ஆயத்தமாவோம்

Yaesuvai varavaerkka aayathamaavoam

அவரோடு இணைந்திடும் பாக்கியம் பெறுவோம்

Avaroadu inainthidum paakkiyam peruvoam

முடிவுரை / Outro

மாரநாதா மாரநாதா

Maaranaatha maaranaatha