🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #307 📜 8 Stanzas த.வ.மா பாடல் புத்தகம்

என் தேவன் என் வெளிச்சம்

En Thaevan En Velicham

✍️ Composed & Sung by Author Unknown {ஆசிரியர் தெரியவில்லை} (En Devan En Velicham)
17
✨ பல்லவி / Chorus

என் தேவன் என் வெளிச்சம்

En thaevan en velicham

என்னை இரட்சிப்பவரும் அவரே

Ennai iratchipavarum avarae

✨ பல்லவி / Chorus

என் ஜீவனுக் கரணானவர்

En jeevanuk karanaanavar

நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்

Naan yaarukkum anjamaataen

சரணம் 1 / Verse 1

தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்

Thaayum thanthaiyum thallivittaalum

அன்பர் இயேசென்னை ஏற்றுக் கொள்வார்

Anbar yaesennai yaetrruk kolvaar

பகுதி / Other

என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்

Ennai avar nizhalil vaithu kaaththiduvaar

தலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார் – என்

Thalai-maelaetrri ennai uyarththiduvaar – en

சரணம் 2 / Verse 2

தீமை செய்கின்றவர்கள் எனக்கு

Theemai seigindravargal enakku

தீமை செய்ய விரும்புகையில்

Theemai seiya virumbugaiyil

பகுதி / Other

என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார்

En thaevan arugil vanthu ennai kaathu nindraar

என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே – என்

Ennai pagaithavargal udanae azhivaarae – en

சரணம் 3 / Verse 3

என்மேல் யுத்தம்தான் எழும்பினாலும் நான்

Enmael yuththam thaan elumbinaalum naan

நல் நம்பிக்கையாயிருப்பேன்

Naal nambikaiyaa-yirupaen

பகுதி / Other

என் நெஞ்சம் பயப்படாமல் கர்த்தரிடத்தினில் நான்

En naenjam payapadaamal kartharidathinil naan

அமைதியுடன் நாட்களை கழித்திடுவேன்

Amaithiyudan naatkalai kazhithiduvaen