விசுவாச கப்பலில் யாத்திரையே
Visuvaasa Kappalil Yaaththiraiyae
விசுவாச கப்பலில் யாத்திரையே
Visuvaasa Kappalil Yaaththiraiyae
வீரமுடன் செல்கின்றோம்
Veeramudan Selkindroam
கப்பலின் மாலுமி கர்த்தர் ஏசு
Kappalin Maalumi Karththar Aesu
கரை சேர்க்க வல்லவரே
Karai Saerkka Vallavarae
அலை மோதும் தேவ அன்பே
Alai Moathum Thaeva Anpae
அக மகிழ்ந்தே ஆர்ப்பரிப்போம்
Aga Makizhnthae Aarpparippoam
கலங்கரை ஜீவ ஓளி - நம்முன்
Kalanggarai Jeeva Oali - Nammun
கர்த்தர் பிரகாசிக்கின்றார் அதோ
Karththar Piragaasikkinraar Atthoa
சமாதான சாலேம் நகர் - வேகம்
Samaathaana Saalaem Nagar - Vaegam
சுகமாக சேர்ந்திடுவோம்
Sugamaaga Saernthiduvoam
விசுவாச கப்பல் நடுக்கடல் சென்றும்
Visuvaasa Kappal Nadukkadal Senrum
வீசும் புயல் காற்றினால் சேதமில்லை
Veesum Puyal Kaatrrinaal Saethamillai
நம்பிக்கை நங்கூரம் ஏசுவே
Nampikkai Nangkooram Aesuvae
நம்மோடிருக்கின்றாரே
Nammoadirukkinraarae
காற்றை கடலை அதட்டி அமர்த்தும்
Kaarrai Kadalai Athatti Amarthum
கர்த்தர் அதிகாரம் உள்ளவரே
Karththar Athigaaram Ullavarae
புயலுக்குள் அமைதி தந்திடுவார்
Puyalukkul Amaithi Thanthiduvaar
பயமின்றி பயணம் செய்வோம்
Payaminri Payanam Seyvoam
வடிவான் சீயோன் துறைமுகம் பக்கம்
Vadivaan Seeyoan Thuraimugam Pakkam
வடதிசை இலக்கை நாம் நோக்கி செல்வோம்
Vadathisai Ilakkai Naam Noakki Selvoam
பரலோக கூட்டம் நம்மை அரவணைத்து
Paraloaga Kootdam Nammai Aravanaithu
வரவேற்க காத்திருக்கும்
Varavaerga Kaaththirukkum