← Pastor Benny Joshua (Vol 1) |
← →
🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
Volume 1 • பாகம் 1 பாடல் #20 📜 3 Stanzas பாஸ்டர் பென்னி ஜோசுவா

யேகோவா யீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்

Yegovah Yirae

✍️ Composed & Sung by Pastor Benny Joshua {பாஸ்டர் பென்னி ஜோசுவா}
17
✨ பல்லவி (Chorus)

யேகோவா யீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்

Yegovah Yirae ellaamae paarthuk kolveer

குறைவுகள் ஒன்றும் எனக்கில்லையே

Kuraivugal ondrum enakkillaiyae

தேவைப்படும் நேரத்தில் தேவைகளைச் சந்திப்பீர்

Thaevaippadum naerathil thaevaigalaich chandhippeer

என்னை நடத்தும் நல்ல மேய்ப்பரே

Ennai nadathum nalla Maeipparae

சரணம் 1 (Verse 1)

புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கின்றீர்

Pullulla idangalil ennai meykkindreer

அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகின்றீர்

Amarndha thanneerandai nadathukindreer

ஆத்துமாவைத் தேற்றி புது பெலன் தந்து

Aathumaavaith thaetri pudhu belan thandhu

நீதியின் பாதையில் நடத்துகின்றீர்

Needhiyin paadhaiyil nadathukindreer

சரணம் 2 (Verse 2)

எலியாவுக்கு அப்பம் காகத்தைக் கொண்டு தந்தீர்

Eliyaavukku appam kaagathaik kondu thandheer

விதவையின் பாத்திரத்தை குறையாமல் காத்தீர்

Vidhavaiyin paathirathai kuraiyaamal kaaththeer

எனக்காய் யாவையும் செய்து முடிப்பவரே

Enakkaai yaavaiyum seidhu mudippavarae

உம்மையே நான் சார்ந்திருப்பேன்

Ummaiyae naan saarndhiruppaen