எஜமானனே உம் சேவைக்காய்
Ejamaananae Um Saevaikkaai
எஜமானனே எஜமானனே
Ejamaananae ejamaananae
உம் சேவைக்காய் என்னை அழைத்தீர்
Um saevaikkaai ennai azhaiththeer
அழியும் என் கைகளைக் கொண்டு
Azhiyum en kaikalaik kondu
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
Azhiyaa um rajjiyam katta
பைத்தியமான என்னைத் தெரிந்தெடுத்தீர்
Paiththiyamaana ennaith therintheduththeer
அழியும் என் உதடுகள் கொண்டு
Azhiyum en uthadukal kondu
அழியா உம் வார்த்தையை சொல்ல
Azhiyaa um vaarththaiyai solla
எத்தனாய் வாழ்ந்த என்னைத் தெரிந்தெடுத்தீர்
Eththanaai vaazhntha ennaith therinthedutheer
ஆராதிப்பேன் அதை எண்ணியே
Aarathippaen athai enniyae
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே
Vaazhnaalellaam ummai mattumae
ஆராதிப்பேன் (8)
Aaraathippaen
என்னில் என்ன நன்மை கண்டீர்
Ennil enna nanmai kandeer
என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்
Ennai azhaiththu uyarththi vaiththeer
உம் சித்தத்தை நான் செய்வதே
Um sithaththai naan seivathae
அனுதினமும் என் போஜனம்
Anuthinamum en poajanam