ஜீவத் தண்ணீரே
Jeeva Thanneerae
ஜீவத் தண்ணீரே ஆவியானவரே
Jeeva thaneerey aaviyaanavarey
வற்றாத நதியாக வாரும் போதகரே
Vatraatha nathiyaaga vaarum pothagarey
வாரும் ஐயா போதகரே – 2
Vaarum iyaa pothagarey – 2
வற்றாத ஜீவ நதியாக – 2
Vatraatha jeeva nathiyaaga - 2
கணுக்கால் அளவும் போதாதைய்யா
Kanukkaal alavum pothaahaiyaa
முழங்கால் அளவும் போதாதைய்யா
Muzhangaal alavum pothaathaiyaa
நீந்தி நீந்தி மூழ்கனுமே - 2
Neenthi neenthi muzhganumey – 2
மிதந்து மிதந்து மகிழனுமே - 2
Mithanthu mithanthu magizhanumey - 2
போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே
Pogum idamellaam aarokkiamey
பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே
Paayum idamellaam parisuthamey
சேரும் இடமெல்லாம் ஆறுதலே - 2
Serum idamellaam aaruthaley - 2
செல்லும் இடமெல்லாம் செழிப்புதானே
Sellum idamellaam sezhipputhaaney - 2
கோடி கோடி மீனவர் கூட்டம்
Kodi kodi meenavar kuttam
ஓடி ஓடி வலை வீசனும்
Odi odi valai veesanum
பாடி பாடி மீன் பிடிக்கனும் - 2
Padi padi meen pidikkanum – 2
பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கனும் - 2
Paraloga devanukku all serkkanum – 2
கரையோர மரங்கள் ஏராளமாய்
Karaiyora marangal yeraalamai
கனிதர வேண்டும் தாராளமாய்
Kani thara vendum thaaraalamai
இலைகள் எல்லாம் மருந்தாகனும் - 2
Ilaigal ellaam marunthaaganum – 2
கனிகள் எல்லாம் உணவாகனும் - 2
Kanigal ellaam unavaaganum – 2