சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்
Sabaiyorae Ellaarum Kartharai Thuthiyunggal
சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்
Sabaiyorae ellaarum karttharai thuthiyungal
ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்
Janangalae yellaarum avaraip potrungal
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது
Avar nammael vaittha kirubai periyathu
அவரது இரக்கம் என்றம் உள்ளது
Avarathu irakkam yendrum ullathu
நம் தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ
Nam dhevan uyarntha selvandhar andro
தேவையான அனைத்தையும் மிகுதியாய் தருவார் -2
Thevaiyaana anaitthaiyumae miguthiyaai tharuvaar
அநேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்
Anega janangalukku kodukka seithiduvaar
கடன் வாங்காமல் வாழச் செய்திடுவார்
Kadan vaangaamal vaazhach seithiduvaar
கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம்
Kartthar kural ketkkum aadugal naam
முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார்-2
Mudivilaa vaazhvu namakkuth thanthiduvaar
ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாதென்றார்
Oruvanum parithukkolla mudiaathendraar
ஒரு நாளும் அழிந்து போக விடமாட்டார்
Oru naalum azhinthu pogavidamaattaar
நமது கர்த்தரோ உறைவிடம் ஆனார்
Namadhu karttharo uraividam aanaar
இன்னல்கள் நடுவிலே மறைவிடம் ஆனார்-2
Innallgal naduvilae maraividam aanaar
விடுதலை கீதங்கள் பாட வைக்கின்றார்
Viduthalai geethangal paada vaikkinraar
வெற்றிக் கொடி அசைத்து ஆடவைக்கின்றார்
Vetrikkodi asaitthu aadavaikkinraar
சொந்த மகனென்றும் பார்க்காமலே
Sondha maganendrum paarkkaamalae
நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே-2
Naam vaazha yesuvai namakkuth thanthaarae
அவரோடுகூட மற்ற எல்லா நன்மைகளும்
Avarodu kooda matra yella nanmaigalum
அருள்வார் என்பது நிச்சயம் தானே
Arulvaar yenbathu nichayam thaanae
தேவனாம் கர்த்தருக்கு ஊழியம் செய்தால்
Dhevanaam karttharukku oozhiyam seithaal
உணவையும் தண்ணீரையும் மிகுதியாய் தருவார்-2
Unavaiyum thanneeraiyum miguthiyai tharuvaar
எல்லா நோய்களையும் அகற்றிடுவார்
Ella noigalayum agatriduvaar
குழந்தை பாக்கியமும் கொடுத்திடுவார்
Kulandhai paakkiyamum kodutthiduvaar