என்ன தியாகம் என் கல்வாரி நாயகா
Enna Thiyaaham En Kalvaari Naayahaa
Listen & Watch on YouTube HD Audio
Stream official recording of என்ன தியாகம் என் கல்வாரி நாயகா (Enna Thiyaaham En Kalvaari Naayahaa)
என்ன தியாகம், என், கல்வாரி நாயகா!
Enna thiyaaham, en kalvaari naayahaa!
என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ!
Ennaiyum ummaippoal maattridavoa!
விண் தூதர் போற்றிடும் உம் - பிதாவையும்
Vin thoothar poattridum um - Pithaavaiyum
விட்டிறங்கி வந்தீரே!
Vittiranggi vantheerae!
மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தீரையா!
Maattu kottiloa vaanjitheeraiyaa!
மானிடர் மேல் அன்பினால்
Maanidar mael anbinaal
ஜெனித்த நாள் முதலாய் - கல்வாரியில்
Jenitha naal muthalaai - kalvaariyil
ஜீவனை ஈயும் வரை
Jeevanaiyum eeyum varai
பாடுகள் உம் பங்காய்க் கண்டீரையா!
Paaduhal um panggaai kandeeraiyaa!
பாவியை மீட்பதற்காய்
Paaviyai meetpatharkaai
தலையைச் சாய்த்திடவோ - உமக்கு ஓர்
Thalaiyai saaithidavoa - umakku oar
தலமோ எங்குமில்லை
Thalamoa enggumillai
உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ!
Um adichuvattil naam sellavoa!
முன் பாதை காட்டினீரே
Mun paathai kaattineerae
தாய் தந்தை வீடும் நாடும் - இன்னும்
Thaai thanthai veedum naadum - innum
தனக்குள்ளதெல்லாம் வெறுத்து
Thanakkullathellaam veruthu
அனுதினம் குருசை சுமப்பவரல்லோ!
Anuthinam kurusai sumappavaralloa!
அப்போஸ்தலர் என்றீரே
Appoasthalar endreerae
பாடுகளல்லோ உம்மை - மகிமையில்
Paaduhalalloa ummai - mahimaiyil
பூரணமாய்ச் சேர்த்ததே
Pooranamaai saerthathae
உம்மோடு நானும் பாடு சகிப்பேன்!
Ummoadu naanum paadu sahippaen!
என் ஜீவனையும் வைத்தே
En jeevanaiyum vaithae
இன்பம் எனக்கினியேன் - என் அருமை
Inbam enakkiniyaen - en arumai
இயேசுதான் என் பங்கல்லோ!
Yaesuthaan en panggalloa!
நேசரின் பின்னே போகத்துணிந்தேன்
Naesarin pinnae poahathunithaen
பாசம் என்னில் வைத்ததால்
Paasam ennil vaithathaal