இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார்
Innaalil Yeasu Naathar Uyirthaar
இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார், கம்பீரமாய்
Innaalil Aesunaathar Uyirththaar, Kampeeramaay
இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்,
Igal Alakai Saavum Venrathiga Veeramaay,
மகிழ் கொண்டாடுவோம்,
Makizh Kondaaduvoam,
மகிழ் கொண்டாடுவோம்.
Makizh Kondaaduvoam.
போர்ச்சேவகர் சமாதி
Poarssaevagar Samaathi
சூழ்ந்து காவலிருக்க,
Soozhnthu Kaavalirukka,
புகழார்ந்தெழுந்தனர்,
Pugazhaarnthezhunthanar,
தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க - மகிழ்
Thoothan Vanthu Kalmoodip Pirikka - Makizh
அதி காலையில் சீமோனொடு
Athi Kaalaiyil Seemoanodu
யோவானும் ஓடிட,
Yoavaanum Oadida,
அக்கல்லறையினின் றேகினார்
Akkallaraiyinin Raekinaar
இவர் ஆய்ந்து தேடிட - மகிழ்
Ivar Aaynthu Thaedida - Makizh
பரி சுத்தனை அழிவுகாண
Pari Suththanai Azhivugaana
வொட்டீர், என்று முன்
Votdeer, Enru Mun
பகர் வேதச்சொற்படி பேதமற்றெழுந்தார்
Pagar Vaethassorpadi Paethamarrezhunthaar
திருச்சுதன் - மகிழ்
Thiruchchuthan - Makizh
இவ்வண்ணமாய்ப் பரன்
Ivvannamaayp Paran
செயலை எண்ணி நாடுவோம்;
Seyalai Enni Naaduvoam;
எல்லோருமே களி கூர்ந்தினிதுடன்
Elloarumae Kali Koornthinithudan
சேர்ந்துபாடுவோம். - மகிழ்
Saernthupaaduvoam. - Makizh