🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
📜 9 Stanzas ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

அன்பு நிறைந்த பொன் இயேசுவே

Anbu Niraintha Pon Yaesuvae

✍️ Composed & Sung by Pushparaj {புஷ்பராஜ்} (Anbu Niraindha Pon Yesuve)
17
✨ பல்லவி / Chorus

அன்பு நிறைந்த பொன் இயேசுவே

Anbu niraintha pon Yaesuvae

நின் பாத சேவை என் ஆசையே

Nin paatha saevai en aasaiyae

சரணம் 1 / Verse 1

உன்னதத்தை விட்டிறங்கி

Unnathathai vittiranggi

என்னிடம் வந்த நாதா நான்

Ennidam vantha naatha naan

பகுதி / Other

உம் அடிமை உம் மகிமை

Um adimai um magimai

ஒன்று மாத்திரமே என் ஆசையாய்

Ondru maathiramae en aasaiyaai

சரணம் 2 / Verse 2

ஜீவனற்ற பாவி என்னில்

Jeevanattra paavi ennil

ஜீவன் பகர்ந்த இயேசுவே

Jeevan pagarntha Yaesuvae

பகுதி / Other

உம்மை விட மண்ணில் வேறே

Ummai vida mannil vaerae

நேசிப்பதில்லை நான் யாரையும்

Naesippathillai naan yaaraiyum

சரணம் 3 / Verse 3

குற்றுயிராய் கிடந்த என்னை

Kuttruyiraai kidantha ennai

முற்றும் நீர் இரட்சித்தீரதால்

Muttrum neer iratchitheerathaal

பகுதி / Other

என்னில் உள்ள நன்றி உள்ளம்

Ennill ulla nandri ullam

தங்குவது எங்கனம் நேசரே

Thanguvathu engganam naesarae

சரணம் 4 / Verse 4

இன்றுலகில் கண்ணீருடன்

Indrulagil kaneerudan

உம் வசனம் விதைக்கிறேன்

Um vasanam vithaikkiraen

பகுதி / Other

அன்று நேரில் உம் அருகில்

Andru naeril um arugil

வந்து பலன்களை காண்பேன் நான்

Vanthu palangalai kaanbaen naan