சத்திய வேதத்தைத் தினம் தியானி
Sathiya Vaedhathai Thinam Thiyaani
சத்திய வேதத்தைத் தினம் தியானி,
Sathiya vaedhathai thinam thiyaani
சகல பேர்க்கும் அதபிமானி.
Sagala paerkkum adhabimaani.
உத்தமஜீவிய வழி காட்டும், உயர்வானுலகில் உனைக்கூட்டும் - சத்திய
Uthama jeeviya vazhi kaattum, uyar vaanulagil unai koottum - Sathiya
வாலிபர் தமக்கூண் அதுவாகும்; வயோதியர்க்கும் அதுண வாகும்
Vaalibar thamakkoon athuvaagum; vayoathiyarkkum adhuna vaagum
பாலகர்க்கினிய பாலும் அதாம்; படிமீ தாத்மபசி தணிக்கும். - சத்திய
Paalagarkiniya paalum athaam; padimee thathmapasi thanikkum
சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாம்;
Sathuru paeyudam amarpuriyum tharunam athu nal aayudhamaam
புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும். - சத்திய
Puthirar mithiraroadu magizhum pozhuthum adhunal uravaagum
புலைமேவிய மானிட ரிதயம் புனிதம் பெறுதற்கதுமருந்தாம்;
Pulaimaeviya maanida rithayam punidham perutharkadhu marundhaam;
நிலையா நரர்வாணாள் நிலைக்க நேயகாய கற்பம் அதாம் - சத்திய
Nilaiyaa nararvaanaal nilaikka naeyakaaya karpam adhaam
கதியின் வழிகாணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அது;
Kadhiyin vazhikaanaathavargal kannukkariya kalikkam adhu;
புதிய எருசாலேம்பதிக்குப் போகும் பயணத்துணையும் அது. - சத்திய
Pudhiya erusaalembathikku poagum payanathunaiyum adhu
மாந்தர் ரக்ஷிப்படையும் வழி வழுத்தும் வேதவார்த்தை அது;
Maandhar ratchippadaiyum vazhi vazhuthum vaedha vaarthai adhu;
வேந்தர் அமைச்சர் முதலெவர்க்கும் விதித்த பிரமாணமும் அதுவே. - சத்திய
Vaendhar amaichar mudhalevarkum vidhitha piramaanamum adhuvae