மீண்டும் கட்டுகிறீர் பாழான இடங்களை
Meendum Kattugireer
மீண்டும் கட்டுகிறீர் பாழான இடங்களை
Meendum kattugireer paazhaana idangalai
மறுபடியும் நடுகிறீர் நிர்மூலமானவைகளை
Marubadiyum nadugireer nir moolamaanavaigalai
என் கண்ணீரை மாற்றி ஆனந்த தைலத்தால்
En kanneerai maattri aanantha thailaththaal
என்னை அபிஷேகம் செய்கின்றீரே
Ennai abhishaegam seygindreerae
உடைந்த பாத்திரம் என்று தள்ளின மனிதர் முன்
Udaintha paaththiram entru thallina manithar mun
விலையேறப்பெற்ற பாத்திரமாய் மாற்றினீர்
Vilaiyaerappettra paaththiramaai maattrineer
வெட்கத்திற்குப் பதிலாய் இரண்டத்தனையாய்
Vetkaththirkup pathilaai irandaththanaiyaai
நன்மைகளைத் தந்து மகிழச் செய்தீர்
Nanmaigalaith thanthu magizha cheytheer
இழந்த வருடங்களின் பலனைத் தருகின்றீர்
Izhantha varudangalin palanaith tharugindreer
வெட்டுக்கிளிகள் தின்றதை மீட்டுக் கொடுக்கின்றீர்
Vettukkiligal thintrathai meettuk kodukkindreer
செழிப்பாய் சாப்பிட்டு திருப்தியடைந்து
Sezhippaai saappittu thirupthiyadainthu
உம் நாமத்தை துதித்திடுவேன்
Um naamaththai thuthiththiduvaen