என் மீட்பரான இயேசுவே
En Meetparaana Yesuvae
என் மீட்பரான இயேசுவே உம்மை ஆராதிக்கின்றேன்
En meetparana Yesuvae ummai aaraadhikkindroam
ஜீவனுள்ள நாளெல்லாம் உமக்காய் வாழ்வேன்
Jeevanulla naalellaam umakkaai vaazhvaen
பாவ சாபங்களை நீக்கி மீட்டெடுத்தீரே
Paava saabangalai neekki meetteduththeerae
உம் சொந்த ஜனமாய் தெரிந்து கொண்டீரே
Um sondha janamaai therindhu kondeerae
மரண இருளின் கூண்டிலிருந்து தப்புவித்தீர்
Marana irulin koondilirundhu thappuvitheer
பாதாளத்தின் கட்டுகளை உடைத்தெறிந்தீர்
Paadhaalaththin kattugalai udaittherintheer
சுதந்திர மனிதனாய் என்னை வாழ வைத்தீர்
Sudhandhira manidhannaai ennai vaazha vaiththeer
உந்தன் பரிசுத்த ஆவியால் முத்திரை போட்டீர்
Undhan parisutha aaviyaal muththirai potteer
உம் இரத்தத்தின் வல்லமையால் வெற்றி சிறந்தீர்
Um irathaththin vallamaiyaal vettri sirandheer
சாத்தானின் தலையை நசுக்கிப் போட்டீர்
Saaththaanin thalaiyai nasukkip potteer
ஜெயம் கொடுக்கும் என் மீட்பரே
Jeyam kodukkum en Meetparae
என்றென்றும் உம்மை உயர்த்துவேன்
Endrendrum ummai uyarthuvaen