அக்கினி அபிஷேகம்
Akkini Abishegam
அக்கினி அபிஷேகம்
Akkini abishegam
பொழிந்திடுவீர் தேவா
Pozhinthiduveer Thevaa
காத்திருக்கும் அடியாரை
Kaathirukkum adiyaarai
நிரப்புவீர் இக்கணமே
Nirappuveer ikkanamae
ஆவியை நீர் ஊற்றிடுவீர்
Aaviyai Neer ootriduveer
உயிரடைந்திடவே செய்திடுவீர்
Uyiradainthidavae seithiduveer
புது பெலன் ஜீவன் தந்திடுவீர்
Puthu belan jeevan thanthiduveer
சாட்சியாக வாழ்ந்திடவே
Saatchiyaaga vaazhnthidavae
இரக்கமாக அக்கினியை
Irakkamaaga akkiniyai
உருக்கமாய் உள்ளத்தில் ஊற்றிடுமே
Urukkamaai ullathil ootridumae
பரிசுத்த பாதையில் நடத்திடுவீர்
Parisutha paathaiyil nadathiduveer
கிருபையிலே வளர்ந்திடவே
Kirubaiyilae valarnthidavae
மாம்சமான யாவர் மேலும்
Maamsaamaana yaavar maelum
ஆவியின் அனலை மூட்டிடுவீர்
Aaaviyin analai mootiduveer
வானம் திறந்து வந்திடுவீர்
Vaanam thiranthu vanthiduveer
வல்லமையை ஈந்திடுவீர்
Vallamaiyai eenthiduveer