🎵 Quick Song Search / பாடல் தேடல்
🔍
பாடல் #178 📜 8 Stanzas செயல்வீரர் கீதங்கள்

சுத்தம் பண்ணப்படாத தேசமே

Suththam Pannapadaatha Thaesamae

✍️ Composed & Sung by FMPB {நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு} (Sutham Pannapadatha Thesame Sutham Pannapadatha Desame)
17
✨ பல்லவி / Chorus

சுத்தம் பண்ணப்படாத தேசமே

Suththam pannapadaatha thaesamae

சுத்திகரிக்க உன்னைத் தருவாயோ?

Suthigarika unnai tharuvaayoa

✨ பல்லவி / Chorus

ஸ்திரப்படாத தேசமே

Sthirapadaatha thaesamae

நீதியின் வஸ்திரம் தரிப்பாயோ?

Neethiyin vasthiram tharippaayoa

சரணம் 1 / Verse 1

வேதத்தை சுமக்கும் சீடர்களே

Vaedhathai sumakkum seedargalae

வேண்டாத சுமைகளை விட்டுவிடுங்கள்

Vaendaatha sumaigalai vittuvidunggal

பகுதி / Other

பாவத்தை சுமக்கும் பாரதத்தில்

Paavathai sumakkum paarathathil

தூய்மைக்கு மாதிரி காட்டிடுங்கள். – சுத்தம்

Thooimaiku maathiri kaatidunggal - Sutham

சரணம் 2 / Verse 2

தேசத்தை ஆளும் பிரபுக்களே

Thaesathai aalum pirabukkalae

தாழ்மையின் குரலுக்கு செவிகொடுங்கள்

Thaazhamaiyin kuralukku sevikodunggal

பகுதி / Other

தேவைக்கு அதிகம் இருப்பதெல்லாம்

Thaevaikku athigam irupaathellaam

ஏழைக்கு தானம் கொடுத்திடுங்கள். – சுத்தம்

Aezhaikku thaanam koduthidunggal -Sutham

சரணம் 3 / Verse 3

பெலனான வயதுள்ள வாலிபரே

Pelanaana vayathulla vaalibarae

தொலைநோக்க கண்களை ஏறெடுங்கள்

Tholainoakka kangalai aeredunggal

பகுதி / Other

எதிர்காலம் கனவாக மறைவதற்குள்

Ethirkaalam kanavaaga maraivatharkul

சுடராக இருளுக்குள் ஒளி கொடுங்கள். – சுத்தம்

Sudaraaga irulukkul oli kodunggal -Sutham