நீர் சொன்னால் போதும்
Neer Sonnal Podhum
நீர் சொன்னால் போதும் செய்வேன்
Neer sonnaal podhum seivaen
நீர் காட்டினால் போதும் செல்வேன்
Neer kaattinaal podhum selvaen
என் வாழ்வின் வழிகாட்டி நீர்தானையா
En vaazhvin vazhikaatti Neerdhaanaiyaa
என் பாதையின் தீபமும் நீர்தானையா
En paadhaiyin dheebamum Neerdhaanaiyaa
மனிதர்களின் குரல்கள் அடங்கிடட்டும்
Manidhargalin kuralkal adangidattum
உந்தன் மெல்லிய சத்தம் கேட்டிடட்டும்
Undhan melliya saththam kaettidattum
உம் சித்தமே என் உணவாகட்டும்
Um siththamae en unavaagattum
உம் பிரியமே என் வாழ்வாகட்டும்
Um piriyamae en vaazhvaagattum
வலைகளை வீசிட சொன்னவரே
Valaigalai veesida sonnavarae
வெற்றியை பரிசாக தந்தவரே
Vettriyai parisaaga thandhavarae
உம் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்திடுவேன்
Um vaarthaikku keezhpadindhu vaazhndhiduvaen
முடிவு வரை உம் பின்னே தொடர்ந்திடுவேன்
Mudivu varai um pinnae thodarndhiduvaen